Sunday, 11 December 2016

இந்தியாவின் முதல் நம்பர் 9 வீரர் சதமடித்தார்: ஜெயந்த் யாதவ் அபார சாதனை

இந்தியாவின் முதல் நம்பர் 9 வீரர் சதமடித்தார்: ஜெயந்த் யாதவ் அபார சாதனை

நோபாலன்


மும்பை டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் புதிய ஆல்ரவுண்டராக ஆஃப் ஸ்பின்னர் ஜெயந்த் யாதவ் எழுச்சிபெற்றுள்ளார். ஜெயந்த் யாதவ் 9-ம் நிலை வீரராக சதம் கண்ட முதல் இந்திய வீரரானார்.
கடினமான 364/7 என்ற நிலையில் களமிறங்கிய ஜெயந்த் யாதவ்வுக்கு ஜோ ரூட் கேட்ச் ஒன்றை தொடக்கத்திலேயே விட்டார், ஆனால் அதன் பிறகு இங்கிலாந்தின் வேகம், ஸ்பின் என்று அனைத்து சோதனைகளையும் கடினமான பிட்சில் தனது அபாரமான தடுப்பாட்டத்தினால் எதிர்கொண்டு மீண்டு பிறகு அபாரமான பவுண்டரிகளையும் அடித்த ஜெயந்த் யாதவ் சற்று முன் வோக்ஸ் பந்தை தேர்ட் மேன் திசையில் தட்டிவிட்டு சதம் கண்டார்.
204 பந்துகளைச் சந்தித்த ஜெயந்த் யாதவ் 15 அருமையான பவுண்ட்கரிகளை அடித்து 104 ரன்கள் எடுத்து ரஷீத் பந்தில் ஸ்டம்ப்டு ஆனார்.
இதன் மூலம் 9-ம் நிலை இந்திய வீரர் ஒருவர் சதம் கண்ட பெருமையை எட்டினார் ஜெயந்த் யாதவ். கோலியும் இவரும் இணைந்து 58.4 ஓவர்களில் 8-வது விக்கெட்டுக்காக 249 ரன்களைச் சேர்த்துள்ளனர், இதில் ஜெயந்த் யாதவ் பங்களிப்பு 104. வெற்றிக்கான இன்னிங்ஸ் இது என்பதில் சந்தேகமில்லை. 
விராட் கோலி தனது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரை எட்டி 225 ரன்களுடன் ஆடி வருகிறார். இதன் மூலம் கேப்டனாக தோனி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்த அதிகபட்ச 224 ரன்களைக் கடந்தார் கோலி. புவனேஷ்வர் குமார் இறங்கியுள்ளார். இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 611 ரன்கள் எடுத்து 211 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது

No comments:

Post a Comment