Saturday, 19 November 2016

ஜிகா வைரஸ் பொது சுகாதார அவசர நிலை முடிந்தது: உலக சுகாதார நிறுவனம்

ஜிகா வைரஸ் பொது சுகாதார அவசர நிலை முடிந்தது: உலக சுகாதார நிறுவனம்
ஜிகா வைரஸ் தொடர்பாக விடுக்கப்பட்ட சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலை தற்போது முடிந்துவிட்டது என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஜிகா வைரஸ் தொடர்பாக விடுக்கப்பட்ட சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலை தற்போது முடிந்துவிட்டது என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான குழந்தைகள் மூளை குறைபாடுகளுடன் பிறந்ததற்குக் ஜிகா தொற்று காரணம் என கூறப்பட்டது. இது பிரதானமாக கொசுக்களால் பரவும் தொற்றாகும். ஜிகா தொற்று 75 நாடுகளில் தற்போது காணப்படுகிறது என்றும் தீவிர நடவடிக்கை தேவைப்படும், குறிப்பிடத்தக்க அளவிலான சவாலான சூழல் தொடர்கிறது என்றும் உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர், டேனியல் எப்ஸ்டீன் பிபிசியிடம் தெரிவித்தார். அவர் பாதிக்கப்பட்ட நாடுகளில் கொசு ஒழிப்பு தொடர வேண்டும் என்றும் கண்காணிப்பு முயற்சிகள் மற்றும் பொது மக்களுக்கு இது தொடர்பான தகவல்களை அளிக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்

No comments:

Post a Comment