Thursday, 9 February 2023

'AI' தொழில்நுட்ப சந்தையில் போட்டா போட்டி! ChatGPT-க்கு போட்டியாக களமிறங்கியது கூகுள்!

நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவர் உலகிற்கு எடுத்துரைத்தார். ஆனால், இன்று கூகுள் இன்றி அமையாது உலகு என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு கூகுளின் பயன்பாடு மனிதர்களை ஆக்கிரமித்துள்ளது. தமக்கு வரும் எந்தவொரு சந்தேகத்தையும், தேவைப்படும் தகவல்களையும் நொடிப்பொழுதில் கொண்டு வந்து திரையில் காண்பித்து விடுகிறது கூகுள். ஒரே ஒரு வார்த்தை டைப் செய்தால் போதும் மலைக்கத்தக்க தகவல்களை அள்ளிக் கொண்டு வந்துவிடுகிறது. தொழில்நுட்ப உலகில் கூகுள் நிறுவனமும் கோலோச்சி வருகிறது. 

இத்தகைய சூழலில் தான், கூகுளுக்கு மாற்றாக ஒரு புதிய artificial intelligence கொண்ட Chatbot வகையான ஒரு தேடுபோறியாக பொது சோதனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது OpenAI என்ற செயற்கை நுண்ணறிவு நிபுணத்துவம் கொண்ட ஆராய்ச்சி நிறுவனம். அதன்படி கடந்த டிசம்பர் 1ம் தேதி ChatGPT (Chat Generative Pre-trained Transformer) என்ற உரையாடல் வழியிலான chatbot-ஐ தொடங்கியிருப்பதாக OpenAI நிறுவனத்தின் CEO சாம் அல்ட்மென் ட்விட்டரில் அறிவித்திருந்தார். இந்த ChatGPT-ல் text typing அல்லது voice மூலம் பயனர்கள் தங்களுக்கு தேவையான தரவுகளை நொடிப்பொழுதில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், coding போன்ற பணியில் இருப்போருக்கு இந்த சாட்GPT பெரிதும் உதவிக்கரமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

image

தொடங்கப்பட்ட குறுகிய காலத்தில் இது உலகலாவிய பேசுபொருளாக மாறியது. அதற்கு காரணம், அதன் விரிவான மற்றும் தெளிவான பதில்கள் விரைவாக கவனத்தை ஈர்த்தது. எதைப் பற்றிய விவரமாக இருந்தாலும், கதை கட்டுரை, இலக்கியம் புராணம், அறிவியல், தொலைதொடர்பு, வானியல்... இப்படி பல செய்திகளை விஷயங்களை அதன் தொடர்புடைய செய்திகளை உடனுக்குடன் தருவதால், இதை கூகுள் கில்லர் என்றுகூட அறியப்பட்டது.

நியூயார்க் டைம்ஸின் கெவின் ரூஸ் இதை "பொது மக்களுக்கு சிறந்த செயற்கை நுண்ணறிவு சாட்போட்" என்று பெயரிட்டார். இத்தகைய நுண்ணறிவு ChatGPT ஐ கண்டு கூகுளே சற்றே கலக்கம் அடைந்திருந்ததாக பேசப்பட்டது.

image

chatGPT தொடங்கிய ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் அதிகமான பயனர்கள் signup செய்து பயன்படுத்த தொடங்கினார்கள். இதனை பயன்படுத்த தொடங்கியவர்கள் சாட் ஜிபிடி குறித்த தங்களது அனுபவத்தை பகிர்ந்தனர். அதில், “chatGPT-இன் வேகத்தை பார்க்கும் போது இனி கூகுளின் தேவை இருக்காது போல. நம்பவே முடியாத அளவுக்கு இந்த AI சிஸ்டம் சிறப்பாகவே இருக்கிறது” என்றும், “chatGPT-இன் இந்த AI தரவுகள் அனைத்தும் கணக்கச்சிதமாக துல்லியமாக இருக்கிறது. இதன் மூலம் தொழில் முனைவோர்கள் எந்த அளவுக்கு தங்களது வேலையை மார்க்கெட்டிங் செய்யலாம் என்பதை சுலபமாக தெரிந்துகொள்ள முடியும்” என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

image

குறுகியகாலத்தில் மிக வேகமாக பிரபலமடைந்த ChatGPT க்கு இணையான நுண்ணறிவு சாட்போட் ஒன்றை பயனீட்டாளர்களுக்கு வழங்கவேண்டும் என்ற நிர்பந்தம் கூகுள் நிறுவனத்திற்கு ஏற்பட்டது. அதற்கான முயற்சியிலும் தீவிரமாக இறங்கியது கூகுள். புதிய சாட்பாட்-ஐ உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அதற்கான தருணம் வந்துவிட்டதாக கூகுள் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. 

image

கூகுள் அறிமுகப்படுத்தவுள்ள ’பார்ட்’ என்பது ஒரு எக்ஸ்ப்ரீமென்டல் கான்வெர்ஷேஷனல் ஏஐ சர்வீஸ் (Experimental conversational AI service) ஆகும். இது லேங்குவேஜ் மாடல் ஃபார் டயலாக் ஆப்ளிகேஷன்ஸ் (Language Model for Dialogue Applications - LaMDA) மூலம் இயக்கப்படுகிறது. இது விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று அறியப்படுகிறது.

image

இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை, "2021-ல், உரையாடல் பயன்பாடுகளுக்கான எங்கள் Language Model for Dialogue Applications (LaMDA) தொழில்நுட்பத்தின் அடுத்தத் தலைமுறைக்கான உரையாடல் திறன்களை அறிமுகப்படுத்தினோம். தற்போது LaMDA மூலம் இயக்கப்படும் 'Bard' என்ற Google AI-ஐ விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளோம்" என தமது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

image

கூகுள் நிறுவனத்திற்கு போட்டியாகத்தான் 'சாட்-ஜி.பி.டி.' செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எலான் மஸ்க்கின் நிறுவனமான ஓபன்-ஏஐ உருவாக்கியது என்று கூறப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சும், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசும் பெருமளவில் முதலீடு செய்துள்ளனர். இத்தகைய சூழலில்தான் சாட்-ஜிபிடிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது கூகுள் நிறுவனம். அதாவது AI எனப்படும்  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒட்டி எழுந்துள்ள சந்தையை பிடிப்பதில் போட்டா போட்டி நிலவுகிறது.

chatGPT குறித்த விரிவான தகவலுக்கு இதனை படிக்கவும்.. ஒரு தட்டுதான்.. கூகுளுக்கே டஃப் கொடுக்கும் chatbot... OpenAI-ன் chatGPT பற்றி தெரியுமா? 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/gfkbzsD
via IFTTT

No comments:

Post a Comment