சென்னை: சாம்சங் நிறுவனம் கேலக்சி எஸ்23 சீரிஸ் போன்களை இந்தியா உட்பட சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த போன்களின் விலையை கலாய்த்து தள்ளியுள்ளது மற்றொரு எலக்ட்ரானிக் உற்பத்தி நிறுவனமான ஒன்பிளஸ். அப்படி என்ன சொல்லியுள்ளது அந்நிறுவனம் என்பதை பார்ப்போம்.
ஆண்ட்ராய்டு ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களில் விலை உயர்ந்த போனாக கேலக்சி எஸ்23 சீரிஸ் போன்கள் அறிமுகமாகி உள்ளன. கேலக்சி எஸ்23, கேலக்சி எஸ்23 பிளஸ் மற்றும் கேலக்சி எஸ்23 அல்ட்ரா என மூன்று போன்கள் தற்போது இந்த சீரிஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.74,999 முதல் ரூ.1,54,999 வரையில் உள்ளது. ரேம், ஸ்டோரேஜ் திறன், கேமரா போன்ற அம்சங்களை பொறுத்து விலையில் மாற்றம் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/okai6zR
via IFTTT
No comments:
Post a Comment