இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மூலம் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் Masked ஆதாரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Masked ஆதாரில் உங்கள் ஆதார் எண்ணில் முதல் 8 இலக்கங்கள் மறைக்கப்பட்டு கடைசி நான்கு இலக்கங்கள் மட்டுமே தெரியும். முதல் எட்டு இலக்கங்களுக்கு பதிலாக "xxxx-xxxx" என்று குறியிடப்பட்டிருக்கும்
Masked ஆதாரைப் பதிவிறக்குவது எளிது. அதைச் செய்ய நீங்கள் அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
Masked ஆதாரை பதிவிறக்கம் செய்வது எப்படி?
1: myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
2: Masked ஆதாரை பதிவிறக்கம் செய்ய “Login”-ஐ கிளிக் செய்யவும்.
3: உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும்.
4: திரையில் காட்டும் Captacha குறியீட்டை சரியாக உள்ளிடவும். Captacha தெளிவில்லாமல் இருந்தால் அருகிலுருக்கும் Refresh பட்டனை கிளிக் செய்து வேறு Captacha குறியீட்டை சரியாக உள்ளிடவும்.
5: அதன்பிறகு, “Send OTP' என்பதைக் கிளிக் செய்யவும்.
6: உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட பத்து இலக்க மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
7: தேவையான இடத்தில் OTP ஐ உள்ளிட்டு திரையில் காட்டப்படும் Login பட்டனை கிளிக் செய்யவும்.
8: ‘Services’ பகுதிக்குச் சென்று, ‘Download Aadhaar’ என்பதைக் கிளிக் செய்யவும்.
9: ‘Review your Demographics Data’ பகுதிக்குச் செல்லவும்.
10: ‘Do you want a masked Aadhaar?’ விருப்பத்தை கிளிக் செய்து, masked ஆதாரை பதிவிறக்கவும்.
11: நீங்கள் தரவிறக்கம் செய்யும் பிடிஎஃப் வடிவிலான ஆதார் “Password” மூலம் லாக் செய்யப்பட்டிருக்கும்
12: அதை திறக்க உங்கள் பெயரின் (ஆங்கிலம்) முதல் 4 எழுத்துகளையும் நீங்கள் பிறந்த வருடத்தையும் உள்ளிட வேண்டும். (உதாரணம்: RAJA1996)
முன்னதாக யுஐடிஏஐ மக்கள் தங்கள் ஆதார் அட்டையை தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்பதால் யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியது. Masked ஆதாரை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியது. சர்ச்சை எழுந்த நிலையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Meity) பின்னர் அறிக்கையை திரும்பப் பெறுவதற்கான மற்றொரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/heyc920
via IFTTT
No comments:
Post a Comment