பேட்டரி வெடிப்பு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஓலா எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை ரூ.10 ஆயிரம் உயர்த்தியுள்ளது அந்நிறுவனம்.
ஓலா எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை ரூ.10 ஆயிரம் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஓலா நிறுவனம். இதன் மூலம் ஓலா எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1.20 லட்சத்துக்கு மேல் உயரும் என கூறப்படுகிறது. திருத்தப்பட்ட விலையானது FAME II (ஹைப்ரிட் மற்றும் மின்சார வாகனங்களின் வேகமான உற்பத்தி மற்றும் பயன்பாடு) திட்டத்தின் கீழ் மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் மானியத்தை உள்ளடக்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மின்சார ஸ்கூட்டர் வெடிப்புகள் மற்றும் தீவிபத்துகள் நிகழ்ந்து கடும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் ஓலா நிறுவனம் இந்த விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொடர்ச்சியாக பல விபத்துகள் நிகழ்ந்ததை அடுத்து இந்த ஆண்டு மார்ச்சில், ஓலா தனது எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் 1,441 யூனிட்களை திரும்பப்பெறும் அறிவிப்பை வெளியிட்டது.
இருப்பினும் ஏப்ரல் மாதத்தில், ஓலா எஸ்1 ஸ்கூட்டர் 12,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை ஆனதால் அதிக விற்பனையான மின்சார ஸ்கூட்டராக மாறியது. எனவே, ஸ்கூட்டருக்கான தேவை இன்னும் அதிகமாக உள்ளதாக கூறி விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஓலா நிறுவனம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/YUszAo6
via IFTTT
No comments:
Post a Comment