Monday, 2 August 2021

பட்ஜெட் விலையில் முதல் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்த ரியல்மி நிறுவனத்தின் ‘டிஸோ’

ரியல்மி நிறுவனத்தின் டிஸோ பிராண்ட் பட்ஜெட் விலையில் முதல் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. வரும் ஆகஸ்ட் 6 முதல் ஆன்லைன் மூலமாக விற்பனையை தொடங்க உள்ளது அந்நிறுவனம். அதையடுத்து ரீடெயில் சந்தைகளிலும் விற்பனைக்கு வர உள்ளது. 

3.5 சென்டிமீட்டர் ஹை-ரெசல்யூஷன் தொடுதிரை வசதி, 90 விதமான ஸ்போர்ட்ஸ் மோட், பன்னிரெண்டு நாட்கள் வரை நீடித்து நிற்கக்கூடிய பேட்டரி திறன், லைவ் வாட்ச் ஃபேஸஸ், ஆரோக்கிய நலன் மற்றும் ஃபிட்னஸ் மானிட்டரிங் வசதி, வாட்டர் ஃப்ரூப் மாதிரியானவை இதில் இடம் பெற்றுள்ளன. 

இந்த ஸ்மார்ட்வாட்சின் விலை 3,499 ரூபாய். பிளிப்கார்ட் மூலம் ஆர்டர் செய்தால் 500 ரூபாய் தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது.

நியாயமான விலையில் சிறந்த ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்வதில் டிஸோ பிராண்ட் மகிழ்கிறது. எங்களது தயாரிப்புகளுக்கு இந்திய சந்தையில் கிடைத்த வரவேற்பே இதற்கு காரணம் எனவும் டிஸோ இந்தியா தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3AgfGVB
via IFTTT

No comments:

Post a Comment