Saturday, 24 July 2021

ஒலிம்பிக்கை கொண்டாடும் வகையில் புதுப்பொலிவு பெற்ற கூகுள் குரோமின் டைனோசர் கேம்

உலக மக்கள் அனைவரும் தங்கள் நாட்டின் சார்பாக, ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உற்சாகமூட்டி வருகின்றனர். இந்நிலையில் ஒலிம்பிக்கை கொண்டாடும் வகையில் கூகுள் குரோம் பிரவுசரின் டைனோசர் கேமுக்கு (T - Rex ரன்) புதுப்பொலிவு கொடுத்துள்ளது கூகுள். 

வழக்கமாக குரோம் பிரவுசரில் ஆப்லைனில் இருக்கும்போது இந்த டைனோசர் கேமை பெரும்பாலானவர்கள் விளையாடி இருக்க வாய்ப்புகள் உள்ளது. டைனோசரின் பாதையில் குறுக்கிடும் சப்பாத்திக்கள்ளி செடிகள் மாதிரியான தடைகளில் இருந்து தப்பிப்பதுதான் இந்த ஆட்டத்தின் டாஸ்க். சுருக்கமாக தடைதாண்டும் விளையாட்டு என கூட சொல்லலாம். 

image

இந்த விளையாட்டில் தற்போது சில தீம்கள் மாற்றப்பட்டுள்ளன. ஒலிம்பிக் ஜோதி, அலைசறுக்கு, தடை தாண்டுதல், நீச்சல் என சில ஒலிம்பிக் ஈவெண்டுகள் புதிதாக டைனோ கேமில் சேர்க்கப்பட்டுள்ளது. இதை மொபைல் மற்றும் கணினியில் விளையாடலாம்.

இணைய இணைப்பை துண்டித்தோ அல்லது CHROMEDINO.COM பயன்படுத்தியோ விளையாடலாம். இது குறித்து கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைகூட ட்வீட் செய்துள்ளார். கேம் ஓவராகும்போது ஒலிம்பிக் போலவே பதக்கமும் கொடுக்கப்படுகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3eUeK0D
via IFTTT

No comments:

Post a Comment