
பயனாளர்களின் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளமாட்டோம் என்று, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனமான வாட்ஸ்அப், தனிநபர் தகவல் பாதுகாப்பு கொள்கையில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி, பயனாளிகளின் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. வழக்கின் விசாரணையின்போது, ஃபேஸ்புக் நிறுவனத்துடன் தகவல் பகிரப்படாது என வாட்ஸ்அப் உறுதியளித்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3iI31U7
via IFTTT
No comments:
Post a Comment