
இந்தியாவில் பயனர்களின் புகார்கள் காரணமாக மே மாதத்தில் 71,132 உள்ளடக்கங்களையும், ஜூன் மாதத்தில் 83,613 உள்ளடக்கங்களையும் கூகுள் நிறுவனம் அகற்றியுள்ளது.
பயனர்களிடமிருந்து வரும் புகார்கள் இல்லாமலேயே கூகுள் மே மாதத்தில் 6,34,357 மற்றும் ஜூன் மாதத்தில் 5,26,866 உள்ளடக்கங்களை தானியங்கி கண்டறிதலின் விளைவாக அகற்றியது. மே 26 முதல் இந்தியாவில் நடைமுறைக்கு வந்த இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப விதிகளின் ஒரு பகுதியாக கூகுள் நிறுவனம் இந்த மாதாந்திர அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
கூகுள் தனது முதல் அறிக்கையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் தனிப்பட்ட பயனர்களிடமிருந்து 27,700 புகார்களைப் பெற்றதாகக் கூறியது. இதில் உள்ளூர் சட்டங்கள் மற்றும் தனிப்பட்ட உரிமைகள் காரணமாக 59,350 உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டன. மே மாதத்திற்கான தனது அறிக்கையில், “தனிப்பட்ட பயனர்களிடமிருந்து 34,883 புகார்களை பெற்றுள்ளது, இதன் விளைவாக 71,132 உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டன.

இது வரை அதிகபட்சமாக ஜூன் மாதத்தில் பயனர் புகார்களின் விளைவாக 83,613 உள்ளடக்கங்களை அகற்றப்பட்டது. இதில் பதிப்புரிமை காரணமாக (83,054), வர்த்தக முத்திரையால் (532), போலியான செய்தியால் (14), விதிமீறல்களால் (4), பிற சட்ட மீறல்களால் (2), கிராஃபிக் பாலியல் உள்ளடக்கம் காரணமாக (1) மற்றும் அவதூறு காரணமாக (1). ஆள்மாறாட்டம் பிரிவின் கீழ்(3) மற்றும் நீதிமன்ற உத்தரவின் கீழ் (2) உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டன.
புதிய ஐடி விதிகளின் கீழ், 5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட பெரிய டிஜிட்டல் தளங்கள், ஒவ்வொரு மாதமும் அவ்வப்போது புகார் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகளை வெளியிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3zU2vsY
via IFTTT
No comments:
Post a Comment