
இந்திய சந்தையில் அறிமுகமானது நோக்கியா 110 4ஜி பியூச்சர் போன். சர்வதேச சந்தையில் கடந்த ஜூன் மாதமே இந்த போன் அறிமுகமாகி இருந்த நிலையில் தற்போது இந்தியாவில் என்ட்ரி கொடுத்துள்ளது. மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. அமேசான் மற்றும் நோக்கியா வலைதளத்தின் மூலம் இந்த போனை ஆர்டர் செய்யலாம்.
சிறப்பம்சங்கள்
4ஜி கனெக்ட்டிவிட்டி, HD வாய்ஸ் காலிங், வொயர்லெஸ் FM, 1.8 இன்ச் QVGA டிஸ்பிளே, 128எம்பி ரேம், 48எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ், 1,020mAh பேட்டரி, டெக்ஸ்ட் டூ ஸ்பீச், மைக்ரோ USB போர்ட்ஸ், டியூயல் சிம், 3.5mm ஆடியோ ஜேக் இந்த போன் அசத்துகிறது.

இந்த போனின் விலை 2,799 ரூபாய். ஒரு முறை சார்ஜ் செய்தால் 13 நாட்கள் வரை பேட்டரி திறன் நீடித்து நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியாவின் அடையாளமான ஸ்நேக் கேமும் இதில் இடம் பெற்றுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3eK7CUw
via IFTTT
No comments:
Post a Comment