
2022-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படக்கூடும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறைகளின் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக இன்று அவர் அளித்த பதிலில், "சந்திரயான்-3 திட்டத்தை மெய்யாக்கும் பணி நடைபெற்று வருகிறது. சந்திரயான்-3 திட்டத்தை மெய்யாக்குவதில் கட்டமைப்புப் பணியை இறுதி செய்தல், துணை அமைப்பு முறைகளின் நடைமுறையாக்கம், ஒருங்கிணைப்பு, விண்கல அளவில் விரிவான சோதனை மற்றும் பூமியின் மீது அமைப்புமுறை செயல்திறனை மதிப்பிடுவதற்கான சிறப்பு சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகள் அடங்கியுள்ளன.
இந்தத் திட்டத்திற்கான பணிகள் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிப்படைந்தது. எனினும், வீடுகளிலிருந்து செய்யக்கூடிய அனைத்துப் பணிகளும் பொதுமுடக்கத்தின்போதும் மேற்கொள்ளப்பட்டன. தளர்வுகள் அறிவிக்கப்படத் தொடங்கியது முதல், சந்திரயான்-3 திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கியதுடன், முதிர்ச்சியான நிலையில் இந்தப் பணிகள் உள்ளன. இயல்பான பணிகள் இனி மேற்கொள்ளப்படும் என்ற அனுமானத்தில், 2022-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படக்கூடும்" என்று அவர் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3lk3EX1
via IFTTT
No comments:
Post a Comment