July 17, 2020 தினசரி நடப்பு நிகழ்வுகள்
வரலாறு
பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்
ஐஎல் 76 விமானங்களுக்கான பி7 ஹெவி டிராப் சிஸ்டம்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு பி7 ஹெவி டிராப்
சிஸ்டத்தை உள்நாட்டிலேயே தயாரித்து வழங்கி உள்ளது. இந்த ஐஎல்76
விமானங்களில் 7 டன் எடை வரை தாங்ககூடியது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த டிராப்சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
> Aerial Delivery Research and Development Establishment பி7 ஹெவி டிராப் சிஸ்டத்தை எல் & டி நிறுவனம் முழுக்க உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது மற்றும் உத்திரபிரதேசத்தில் உள்ள டி.ஆர்.டி.ஓ.வின் ஆய்வகம் இணைந்து வடிவமைத்தது.
உலக அமைப்புகள்-உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள்
இளைஞர்களுக்கு தொழில் ஆலோசனைகளை வழங்கவுள்ள யுனிசெஃப்
இந்திய யுனிசெஃப், எஸ்ஏபி (SAP)
இந்தியாவுடன் இணைந்து இளைஞர்களுக்கு தொழில் ஆலோசனை வழங்குகிறது.
மேலும் யுனிசெஃப் Yuwaah உடன் இணைந்து டிஜிட்டல் கல்வி மற்றும்
வேலைவாய்ப்புக்கான திறன் வழிக்காட்டுதல்களை வழங்குகிறது.
யுனிசெஃப் இந்தியா
இந்தியா தலைவர் - டாக்டர் யாஷ்மீன் அல்அக்
பொருளாதாரம்
புதிய பொருளதார கொள்கை மற்றும் அரசுத்துறை
கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பிற்கு 15000 கோடி நிதி
ஆத்மநிர்பர் பாரத் அபியான் பொருளாதார நிதி தொகுப்பை தொடர்ந்து ரூ.15000 கோடி கொண்ட கால்நடை பராமரிப்பிற்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தை
அமைக்க அமைச்சரவை ஒப்புதல்
அளித்திருந்தது, தற்போது அந்நிதியை
செயல்படுத்துவதற்கான வழிகாட்டுமுறையை அரசு அறிமுகம் செய்துள்ளது.
கால்நடை வளர்ப்பு துறையில் செயலாக்கம் மற்றும் மதிப்பு கூட்டல்
உள்கட்டமைப்பில் பங்கேற்பதற்காக எம்.எஸ்.எம்.இ மற்றும் தனியார்
நிறுவனங்களில் ஊக்குவிக்க இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அறிவியல்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்
கோவிட் -19 வைரஸ் தொற்று கண்டறியும் கருவி "Corosure"
ஐஐடி-டெல்லி ஆராய்ச்சியாளர்கள்
உலகின் விலைக்குறைவான
கோவிட்-19 வைரஸ் தொற்றைக் கண்டறியும் கருவி "Corosure" உருவாக்கி உள்ளனர்.
மத்திய - மனிதவள மேம்பாட்டுத்துறை
அமைச்சர் ஸ்ரீரமேஷ் போகிரியால் அவர்கள் இணையத்தளம் வழியாக இதை வெளியிட்டார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய போதை மருந்து
கட்டுபாட்டு மையம் ஆகிய அமைப்புகளின் ஒப்புதலையும் பெற்றுள்ளது.
முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நியுமோகோக்கல்
பாலிசாக்கரைட் காஞ்சுகேட் தடுப்பு மருந்து
முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நியுமோகோக்கல்
பாலிசாக்கரைட் காஞ்சுகேட் தடுப்பு மருந்துக்கு இந்திய மருந்துக்
கட்டுப்பாட்டுத் தலைமையகம் (டி சி ஜி ஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட்
என்ற நிறுவனம், இந்தத் தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது.
இந்தியாவில் இந்த மருத்துவ ஆய்வுகள் நடந்து முடிந்துவிட்டன. இந்த
ஆய்வுகள் மற்றொரு நாடான - காம்பியாவிலும் நடத்தப்பட்டுவிட்டன.
நிமோனியா காய்ச்சல் தொடர்பான துறையில், உள்நாட்டிலேயே
தயாரிக்கப்பட்ட முதலாவது தடுப்பு மருந்தாகும் இது.
சைகோவி-டி (ZyCov-D) எனப்படும் கோவிட் 19 நோய்க்கான தடுப்பு
மருந்து
உயிரி தொழில்நுட்ப தொழில்
ஆராய்ச்சி உதவிக் குழுவினால்
(பிஐஆர்ஏசி) நடைமுறைப்படுத்தப்படும் தேசிய உயிரி மருந்தாளுமை
திட்டத்தின் கீழ் மத்திய அரசின் உயிரியல் தொழில்நுட்பத் துறையின்
ஆதரவுடன் செயல்படுத்தப்படும் தடுப்பு மருந்து கண்டுபிடிப்புத் திட்டம்
மூலம் கோவிட்-19 நோய்க்கான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட
முதலாவது தடுப்பு மருந்து சைகோவி-டி இது என்றும் பிஐஆர்ஏசி
அறிவித்துள்ளது.
ஊடகம் மற்றும் தொலைத்தொடர்பு
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் டிஜிட்டல் கல்வி குறித்த
PRAGYATA வழிகாட்டுதல்
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால்
நிஷாங்க்' டிஜிட்டல் கல்வி குறித்த "பிரக்யாட்டா" வழிகாட்டுதல்களை
புதுடில்லியில் காணொளிக் காட்சி மூலம் வெளியிட்டார்.
PRAGYATA வழிகாட்டுதல்களில் இணையம் / டிஜிட்டல் வழி கற்றலில்
எட்டு படிகள் உள்ளன. அதாவது திட்டம் - விமர்சனம் - ஏற்பாடு வழிகாட்டி - யாக் (பேச்சு) - பாடப்பணி - கண்காணித்தல் - பாராட்டு இந்தப்படிகள் டிஜிட்டல்
கல்வியின் திட்டமிடலுக்கும்
செயல்படுத்தலுக்கும் படிப்படியாக
எடுத்துக்காட்டுகளுடன்
வழிகாட்டுகின்றன.
மெய்நிகர் விழிப்புணர்வு பிரச்சாரம் - 'CybHER
தெலங்கானா மாநில காவல்துறை மற்றும் பெண்கள் பாதுகாப்பு விங்க்
ஆகியவை இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் சைபர்
குற்றங்களில் இருந்து பாதுகாப்பு வழங்குவதற்காக 'CybHER' என்ற
மெய்நிகர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை
தொடங்கி உள்ளனர். பலதரப்பட்ட சமூக இணையத்தளமான முகநூல், இன்ஸ்டாகிராம் டிவிட்டர், யூடூப் போன்றவைகளில் இருந்து பாதுகாப்பு வழங்குவதே இதன் நோக்கமாகும். சைபர் பிரிவில் வல்லுநரான ரக் ஷித் தன்தோன் இந்த பிரச்சாரத்தை முன்னின்று வழிநடத்தி செல்கின்றார்.
தினசரி தேசிய நிகழ்வு
அறிவுசார் சொத்துரிமை வழக்குகளில் இந்தியா முதல் பத்து நாடுகளில் இடம் பெற்றுள்ளது
உலக அறிவுசார் சொத்துரிமை 2019ஆம் ஆண்டிற்காக அறிக்கை
வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா அறிவுசார் சொத்துரிமை வழக்குகளில் முதல் பத்து இடங்களில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மேக் இன் இந்தியா, திறன் இந்தியா, சுயசார்பு பாரதம்
போன்ற அரசின் திட்டங்கள் அதிகரித்து வருவதால் அறிவுசார் சொத்துரிமை வழக்குகள் மற்றும் மானியம் வழங்கல் முறை அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஐதராபாத்தில் உள்ள பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய
தேசிய மையத்தில் தூய்மை வாரம்
மத்திய புவி அறிவியல் அமைச்கத்தின் கீழ் ஐதராபாத்தில் இயங்கும்
தன்னாட்சி நிறுவனமான பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய
தேசிய மையத்தில் தூய்மை வாரம்
ஜூலை 15 வரை கடைபிடிக்கப்பட்டது.
திறந்தவெளி கழிப்பறை முறையை அகற்றுதல், திட மற்றும் திரவக் கழிவுகளை திறம்பட நிர்வகித்தல், சுற்றுச்சூழலுக்கு உகந்த பாதுகாப்பான மற்றும் நிலைத்த சுகாதார முறைகளைக் கடைபிடித்தல்,
ஒட்டுமொத்த தூய்மை ஆகியவற்றை இலக்குகளாகக் கொண்டு பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
வல்லற்பாதம் முனையத்தில் கப்பல் விட்டு கப்பலுக்கு சரக்கு மாற்றும்
மையம்
டி பி ஓர்ல்டு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இது நாட்டின் முதலாவது கப்பல் விட்டு கப்பலுக்கு சரக்கு மாற்றும் மையமாக உருவெடுத்து
உள்ளது.
நாட்டின் முதலாவது கப்பல் விட்டு கப்பலுக்கு சரக்கு மாற்றும் மையம்
மற்றும் ஆசியாவின் முன்னோடி மையம்.
உள்ளூரில் வல்லற்பாதம் என்று அழைக்கப்படும் கொச்சி சர்வதேச
சரக்குப் பெட்டகக் கப்பல் விட்டு கப்பல் மாற்றும் முனையம் (ஐ சி டி டி)
இந்தியக் கடற்கரைப் பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த வகையிலான
இடத்தில் அமைந்துள்ளது.
சர்வதேச கடல் மார்க்கங்களின் மிக அருகில் அமைந்துள்ள இந்தியத் துறைமுகம் இது ஆகும்.
இதற்கு சரக்கு அனுப்பக்கூடிய இந்திய துறைமுகங்களுக்கும் குறைந்த
கடல் வழித்தூரத்திலியே இது அமைந்துள்ளது.
முந்த்ரா முதல் கொல்கத்தா வரையிலான இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை துறைமுகங்கள் அனைத்திற்குமான பல வாராந்திர கப்பல் போக்குவரத்து இணைப்புகளைப் பெற்றுள்ளது.
சர்வதேச நிகழ்வு
இந்தியா-இத்தாலி வர்த்தகக் கூட்டம்
மெய்நிகர் முறையில் உணவுப் பதப்படுத்துதலுக்கான டிஜிட்டல்
இந்தியா-இத்தாலி வர்த்தகக் கூட்டத்தின் தொடக்க அமர்வில் மத்திய
உணவுப் பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சர் திருமதி.ஹர்சிம்ரத்
கவுர் கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment