திருக்குறள் தொடர்பான செய்திகள்
🌹திருக்குறளை இயற்றியவர் - திருவள்ளுவர்
🌹திருவள்ளுவரின் காலம் - கி.மு. 31
🌹 திருவள்ளுவரின் வேறு பெயர்கள் - நாயனார், முதற்பாவலர், நான்முகனார்,
மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர், தேவர், பொய்யில் புலவர்
🌹 திருக்குறளின் மூன்று பிரிவுகள் - அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்
🌹 திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை - 133
🌹 திருக்குறளிலுள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை - 1330
🌹 திருக்குறள் -------------- நூல்களுள் ஒன்று - பதினெண்கீழ்க்கணக்கு
🌹 திருக்குறளின் வேறு பெயர்கள் - வாயுறை வாழ்த்து, பொய்யா மொழி, தெய்வ
நூல், முப்பால், பொதுமறை, தமிழ்மறை, உத்தரவேதம்
🌹 திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812
🌹. திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் - மலையத்துவசன் மகன்
ஞானப்பிரகாசம்
🌹 உலகப்பொதுமறை எனப் போற்றப்படும் நூல் - திருக்குறள்
🌹. திருக்குறளின் பெருமையை உணர்த்தும் நூல் - திருவள்ளுவமாலை
🌹 திருக்குறள் ------------ வெண்பாக்களால் ஆன நூல் ஆகும் - குறள்
🌹. இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே என்று திருக்குறளை புகழ்ந்து பாடியவர்
- பாவேந்தர் பாரதிதாசன்
🌹. தமிழகத்தில் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுவது எப்போது - தைத்
திங்கள் இரண்டாம் நாள்
🌹. திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் - ஊழியல் (அதிகாரம்: ஊழ்)
🌹 அறத்துப்பாலில் உள்ள அதிகாரம் மற்றும் இயல்களின் எண்ணிக்கை - 38
அதிகாரங்கள், 4 இயல்கள்
🌹 பொருட்பாலில் உள்ள அதிகாரம் மற்றும் இயல்களின் எண்ணிக்கை - 70
அதிகாரங்கள், 3 இயல்கள்
🌹. இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரம் மற்றும் இயல்களின் எண்ணிக்கை - 25
அதிகாரங்கள், 2 இயல்கள்
🌹. திருக்குறளில் ஒரே பெயரில் இருமுறை வரும் அதிகாரம் - குறிப்பறிதல்
🌹. திருக்குறளில் உள்ள இயல்கள் - 9
🌹 திருக்குறளில் உள்ள சொற்கள் - 14,000
🌹. திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் - 42,194
🌹. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்
🌹. திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் - மூங்கில், பனை
🌹. திருக்குறளை ஆங்கிலத்தில் முதன் முதலில் மொழிபெயர்த்தவர் - ஜி.யூ. போப்
🌹. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்
BEST POST.
ReplyDeleteIas interview questions in hindi
Upsc interview questions