பொது அறிவு வினா விடைகள்
🔥 ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆகிய இரு சகோதரர்களால் கர்நாடகத்தின் தென் பகுதியில் நிறுவப்பட்டப் பேரரசு எது? - விஜயநகரப் பேரரசு
🔥 விஜயநகரப் பேரரசானது எத்தனை அரச மரபுகளால் ஆளப்பட்டது? - நான்கு
🔥 ஹரிஹரர் மற்றும் புக்கர் எந்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள்? - சங்கம வம்சம்
🔥 குமார கம்பணாவின் மனைவி, கங்கா தேவியால் எழுதப்பெற்ற நு}ல் எது? - மதுரா விஜயம்
🔥 மதுரா விஜயம் என்ற நு}ல் எந்த நகரம் கைப்பற்றப்பட்டதைப் பற்றித் தௌpவாக விளக்குகிறது? - மதுரை
🔥 துளுவ வம்ச அரசர்களுள் மிகவும் போற்றுதலுக்குரியவர் யார்? - கிருஷ்ணதேவராயர்
🔥 கிருஷ்ணதேவராயர் எத்தனை ஆண்டுகள் ஆட்சிப் புரிந்தார்? - இருபது ஆண்டுகள்
🔥 விஜயநகரம் இருந்த இடம் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது? - ஹம்பி
🔥 ஹம்பியை பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது எது? - யுனெஸ்கோ
🔥 அரவீடு வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கியவர் யார்? - திருமலை தேவராயர்
🔥 தெலுங்கு இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படும் இலக்கியம் எது? - அமுக்தமால்யதா
🔥 விஜயநகரப் பேரரசர்கள் -------- என்னும் பெயரில் அதிக எண்ணிக்கையிலான தங்க நாணயங்களை வெளியிட்டனர். - வராகன்
🔥 'அமுக்தமால்யதா" என்னும் காவியத்தைத் தெலுங்கு மொழியில் இயற்றியவர் யார்? - கிருஷ்ணதேவராயர்
🔥 'பாண்டுரங்க மகாத்தியம்" என்னும் நாடக நு}லை எழுதியவர் யார்? - தெனாலி ராமகிருஷ்ணா (தெனாலிராமன்)
No comments:
Post a Comment