Thursday, 29 December 2016

CURRENT AFFAIRS 29/12/2016 IN TAMIL

 நடப்பு நிகழ்வுகள்      29-12-2016


இந்தியா

✍மார்ச் 31-ம் தேதிக்கு பின்னர் பழைய ரூ500,1000 நோட்டுகளை வைத்திருந்தால் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
✍ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மொத்த வணிகர்கள், சில்லறை வியாபாரிகள் மற்றும் தொழில்முறை சேவை வழங்குவோருக்காக ” ஈஸிபே “(eazypay app) என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.
✍உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எஸ். சிங்வி, ஓ.என்.ஜி.சி.- ரிலையன்ஸ் இழப்பீடு விவகாரம் தொடர்பாக மதிப்பீடு செய்யும் நடுவர் குழுவில் மத்திய அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதன் பங்குதாரர் நிறுவனங்களான பிரிட்டனின் பி.பி. நிறுவனம், கனடாவின் நிக்கோ ரிசோசர்ஸ் ஆகியவற்றின் சார்பில் நடுவர் குழுவுக்கு பிரிட்டனின் உயர்நீதிமன்ற நீதிபதி பெர்னார்டு எடர் கடந்த வாரம் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
4✍வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதற்கு, 20,000 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு (என்ஜிஓ) மத்திய உள்துறை அமைச்சகம் திடீர் தடை விதித்துள்ளது.விதிகளை மீறி அந்த நிறுவனங்கள் செயல்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
✍ஆந்திரா மாநில விஜயவாடாவில் 5வது சர்வதேச குச்சிபுடி நடன மாநாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு 6117 நடன கலைஞர்கள் கலந்து கொண்ட Jayamu Jayamu என்ற நாட்டியம் நடைபெற்றது.இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.


உலகம்


✍Hafnium carbide (HfC) & Tantalum carbide (TaC) என்ற இரண்டும் உலகின் மிக அதிவெப்பம் தாங்கும் உலோகங்கள் என பிரிட்டனின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.Hafnium carbide (HfC) 3958 ℃ மற்றும் Tantalum carbide (TaC) 3768 ℃ வரை வெப்பத்தை தாங்கும் சக்தியுடையவை என கண்டறிந்துள்ளனர்.


விளையாட்டு


2016-ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள கனவு ஒருநாள் அணியின் கேப்டனாக, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோயிலில் நடைபெற்று வரும் சீனியர் தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ஜிம்ஜங் தேரு (62 கிலோ), கிளீன் & ஜெர்க் பிரிவில் 153 கிலோ எடையை தூக்கி புதிய தேசிய சாதனை புரிந்துள்ளார்.இதற்கு முன்பு கிளீன் & ஜெர்க் பிரிவில் சத்தீஸ்கரைச் சேர்ந்த பளுதூக்குதல் வீரர் ருஸ்டம் சாரங் 152 கிலோ எடையை தூக்கியதே தேசிய சாதனையாக இருந்து வந்தது.மேலும் ஜிம்ஜங் தேரு முதலில் ஸ்நாட்ச் பிரிவில் 113 கிலோ எடையைத் தூக்கினார். பின்னர், கிளீன் & ஜெர்க் பிரிவில் 153 கிலோ எடையைத் தூக்கினார். மொத்தமாக 226 கிலோவை எட்டிய அவர் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.அதே பிரிவில் அந்தோனி ராஜ் வெள்ளியும், ஸ்ரீனிவாச ராவ் வெண்கலமும் வென்றனர்.


இன்றைய தினம்


உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை ஹாங்காங்கில் நிறுவிய நாள் 29 டிசம்பர் 1993.
அமெரிக்காவின் முதலாவது இளைய கிறிஸ்தவர்களின் அமைப்பு (வை.எம்.சி.ஏ) பொஸ்டனில் அமைக்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 1851.
தாமஸ் அல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்ற நாள் 29 டிசம்பர் 1891.
சுன் யாட்-சென் சீனக் குடியரசின் முதலாவது அதிபரான நாள்  29 டிசம்பர் 1911.

No comments:

Post a Comment