வெனிசுவேலா:
கடத்தலை ஒழிக்க ரூபாய் நோட்டுக்களை நாணயங்களாக மாற்றப்போவதாக அறிவிப்பு
Getty Images
வெனிசுவேலா நாட்டில், 72 மணி நேரத்திற்குள் உயர்
மதிப்புக் கொண்ட ரூபாய் நோட்டுக்களை நாணயங்களாக மாற்றவுள்ளதாக அரசு
அறிவித்துள்ளது.
வெனிசுவேலா நாட்டில், 72 மணி நேரத்திற்குள் உயர்
மதிப்புக் கொண்ட ரூபாய் நோட்டுக்களை நாணயங்களாக மாற்றவுள்ளதாக அரசு
அறிவித்துள்ளது.
கடத்தலை தடுக்கவும், நீண்ட காலமாக உள்ள உணவு
பற்றாற்குறை மற்றும் பிற அடிப்படை தேவை பொருட்களின் பற்றாற்குறையை சரி செய்யவும்
அது உதவும் என நம்பப்படுகிறது.
எல்லைப்
பகுதிகளிலிருந்து இயங்கும் கடத்தல் கும்பலுக்கு, பணத்தை மாற்றுவதற்கான நேரம் கிடைக்காது என அதிபர்
நிக்கோலஸ் மடூரா தெரிவித்துள்ளார்.
நூறு போலிவர்
(வெனிசுலாவின் கரன்ஸி) கடந்த சில வருடங்களாக மதிப்பை இழந்து வருகிறது; தற்போது இரண்டு அமெரிக்க
செண்டுகளுக்கு குறைவான மதிப்பையையே அது பெற்றுள்ளது.
இந்தியாவில் கடந்த
மாதம் இம்மாதிரியான ஒரு முயற்சியாக 500 மற்றும் 1000 ரூபாய்
நோட்டுக்கள் திடீரென செல்லாது என்று அறிவிக்கப்பட்டமையால் மக்கள் பல சிரமங்களை
சந்தித்து வருகின்றனர்.
தீவிர பொருளாதார
மற்றும் அரசியல் நெருக்கடியை சந்தித்து வரும் வெனிசுவேலா, உலகின் அதிகளவு பணவீக்க
விகிதத்தை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment