Saturday, 17 July 2021

சாம்சங் A22 5ஜி போனின் விலை ஆன்லைனில் கசிவு

இந்தியாவில் கூடிய விரைவில் வெளியாகவுள்ள சாம்சங் A22 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரம் ஆன்லைனில் கசிந்துள்ளது. இந்த போன் எப்போது வெளியாகிறது என்ற அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. பட்ஜெட் ரக மாடலாக இந்த போன் வெளியாக உள்ளது.

'91மொபைல்ஸ்' செய்தியின் படி இந்த போன் இரண்டு வேரியண்டாக வெளியாகிறது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னெல் ஸ்டோரேஜ் வசதி கொண்ட போனின் விலை 19,999 ரூபாய்க்கும், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னெல் ஸ்டோரேஜ் வசதி கொண்ட போனின் விலை 21,999 ரூபாய்க்கும் வெளியாகும் எனத் தெரிகிறது. 

image

6.6 இன்ச் ஃபுல் HD டிஸ்பிளே, ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட், ரியர் சைடில் மூன்று கேமராவும், 5000mAh பேட்டரி, 15வாட்ஸ் சார்ஜிங் வசதி மாதிரியானவை இந்த போனில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3etRIgN
via IFTTT

No comments:

Post a Comment